Wednesday, March 21, 2018

திருநெல்வேலி சிறப்பு

🌙🌙🌙 சிவ சிவ 🌙🌙 சிவாய நம,, 🌙🌙🌙

🍀திருநெல்வேலியை_சுற்றியுள்ள_
கோவில்கள்_பற்றிய_விவரங்கள்

🌹தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.

🍃அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

🌷1.காந்திமதி_நெல்லையப்பர்_கோவில்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்
 இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

🌻 2.சபை_சிவாலயங்கள்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சித்ர சபை - திருக்குற்றாலம் தாமிர சபை- திருநெல்வேலி,,

🍁3.முப்பீட_தலங்கள்
 அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில் ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
 வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

🌸4.பஞ்ச_ஆசன_தலங்கள்
ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
நான்குநேரி - திருநாகேஷ்வரர்
 திருக்கோயில்
விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்

🍃தென்பாண்_நாட்டின்_பஞ்ச_பூத_தலங்கள்
சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
தாருகாபுரம் - நீர் தலம்
தென்மலை- காற்று தலம்
தேவதானம் - ஆகாய தலம்

🍂 5.காசிக்கு_சமமான_பஞ்ச_குரோச
தலங்கள்,,
 சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

🐚6.இராமர்_வழிபட்ட_பஞ்சலிங்க_தலங்கள்

களக்காடு- சத்யவாகீசர்
பத்தை - குலசேகரநாதம் பதுமனேரி - நெல்லையப்பர்தேவநல்லூர் - சோமநாதம்
சிங்கிகுளம் - கைலாசநாதம்

🌴 7.நவ_சமுத்திர_தலங்கள்

அம்பாசமுத்திரம்
ரவணசமுத்திரம்
வீராசமுத்திரம்
அரங்கசமுத்திரம்
தளபதிசமுத்திரம்
வாலசமுத்திரம்
கோபாலசமுத்திரம்
வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

🌾8.பஞ்ச_பீட_தலங்கள்
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

கூர்ம பீடம் - பிரம்மதேசம்
சக்ர பீடம் - குற்றாலம்
பத்ம பீடம் - தென்காசி
காந்தி பீடம் - திருநெல்வேலி
குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

🌺9.சிவ_கைலாயங்கள் (ஆதி கைலாசம்)

பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில் முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்

🌙தச_வீரட்டானத்_தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்) சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம் கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம் சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம் மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்
அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்
காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)

🌻 10.வாலி_வழிபட்டத்_தலங்கள்

திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில் கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்

⚡நவகைலாயங்களும்_நவக்கிரகங்களின் ஆட்சியும்,,

பாபநாசம் - சூரியன்
சேரன்மகாதேவி - சந்திரன்
கோடகநல்லூர் - செவ்வாய்
குன்னத்தூர் - இராகு
முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

🌸11.வேறு_சில_ஆலயங்கள்
இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

🌺நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.

🍁நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.

🍀சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.,,

  • 🐚 சிவாய நம,, 🍀 இனிய🌷 இனியசொல் 🍁 மாலைப்பொழுது 🌺 இரவு 🌻 வணக்கம் 🍂 சிவ சிவ 🌾

Tuesday, March 20, 2018

ஓம் நமசிவாய

63 நாயன்மார்களும், அவர்களைப் பற்றிய எளிமையான வரலாற்று சுருக்கமும்

1. திருநீலகண்ட நாயனார் / Tiru Neelakanta Nayanar கூடா நட்பின் விளைவால்,மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது,முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவபெருமான் அருளால் இளமை பெற்றார்.

2.இயற்பகை நாயனார் / Iyarpahai Nayanarசிவனடியாராக வந்த சிவனிடம்,தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.

3.இளையான்குடிமாற நாயனார் / Ilayankudi Mara Nayanar நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக,நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4.மெய்ப்பொருளார்  / Meiporul Nayanar தன்னுடைய பகைவன்,போலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும்,சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து,பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5.விறல்மிண்டர் / Viralminda Nayanar சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால்,சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.

6.அமர்நீதியார் / Amaraneedi Nayanar சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக,ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்

7.எறிபத்தர் / Eripatha Nayanar சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். பின்,தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8.ஏனாதிநாதர் / Enadinatha Nayanar கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல்,தன் உயிர் இழந்தவர்.

9.கண்ணப்பர் / Kannappa Nayanar பக்தியில்,சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர்.அன்புப் பெருக்கால்,மாமிசத்தையும் நைவைத்தியமாய் இறைவருக்குப் படைத்தவர்.

10.குங்கிவியக்கலயர் / Kungiliya Kalaya Nayanar சாய்ந்த லிங்கத்தை,தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும்,மனைவி கொடுத்த தாலியை விற்று,உணவு வாங்காமல்,சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.

11.மானக்கஞ்சறார் / Manakanchara Nayanar மறுநாள்,தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும்,சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12.அரிவாட்டாயர் / Arivattaya Nayanar சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால்,மாறாக, தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

13.ஆனாயர் / Anaya Nayanar புல்லாங்குழல் ஓசையில்,சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14.மூர்த்தி / Murthi Nayanar சந்தனக் கட்டைகள் கிடைக்காது,தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர்.நாடாளும் பொறுப்பு வந்தாலும், திருநீறு, உருத்திராக்கம்,சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்

15.முருகர் / MurugaNayanar வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப  பூமாலையாம் , பாமாலைசாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16.உருத்திரபசுபதி / Rudra Pasupathi Nayanar கழுத்தளவு நீரில், பகல் இரவு பாராமல், ருத்ரம் ஓதியவர்.

17.திருநாளைப்போவார் ( நந்தனார்) / Tiru Nalai Povar Nayanar தாழ்ந்த குலமென்பதால், கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18.திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanarசிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால், தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19.சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanar சிவலிங்கத்திற்கு பால் அபிடேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்ததந்தையின் காலை வெட்டியவர்.

20.திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanar தேவாரம் பாடி, உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பலஅற்புதங்கள் மூலம், சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21.குலச்சிறையார்/Kulacchirai Nayanar பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

22.பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanar சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23.பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyar இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தாள். பின், இறைவனே துடிக்க,பேய் வடிவம் எடுத்தவர்.  சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர்.  அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24.அப்பூதி அடிகள்/Appuddi Nayanar திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால்கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாதுஎன்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின், இறந்த மகன், சிவன்அருளால் உயிர் பெற்றான்.

25.திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanar திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதியமனைவியை கடிந்து ஏசியவர்.

26.நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigal தண்ணீரால் விளக்கு ஏற்றியவர்

27.திருஞானசம்பந்தர்/Tiru Jnana Sambandar
ஞானக் குழந்தை.  பல அற்புதங்கள் செய்தவர்.  பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர்.  அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர்.  சமணர்களைவென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28.ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanar இறைவனை, தூதுதவராய் அனுப்பிய சுந்தர நாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநொய்பெற்றார். பின், சிவன் அருளால், நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்/Tiru Mula Nayanar திருமந்திரம் பாடியவர்.  நந்தி எம்பெருமானின் மாணாக்கர்.  சித்தர்.

30.தண்டி அடிகள்/Dandi Adigal Nayanar கண் குருடாக இருந்தாலும், சமுதாய நோக்கம் கொண்டு, குளம் தோண்டியவர். சிவஅருளால், கண் பார்வை மீண்டும் பெற்றவர்.

31.மூர்க்கர்/Murkha Nayanar சூதாடி, வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்

32.சோமாசிமாறர்/Somasira Nayanar நிறைய யாகம் நடத்தி, சிவ பூஜை செய்தவர். சுந்தரரின் நண்பர்.

33.சாக்கியர்/Sakkiya Nayanar அன்பால், சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.

34.சிறப்புலி/Sirappuli Nayanar சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanar பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக, தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36.சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanar சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

37.கணநாதர்/Gananatha Nayanar சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.

38.கூற்றுவர்/Kootruva Nayanar நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால், தன்சிந்தையில், சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

39.புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanar எறிபத்தர், தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து, சிவனை நினைத்து,தன் உயிரை விட நினைத்த மன்னர்.

40.நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyar சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.

41.அதிபத்தர்/Adipattha Nayanar வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று, ஒருபொன் மீன் கிடைத்தாலும், சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42.கலிக்கம்பர்/Kalikamba Nayanar முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட, உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43.கலியர்/Kalia Nayanar வறுமையில், தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில், தன் இரத்தத்தால், விளக்கு ஏற்றியவர்.

44.சத்தி/Satti Nayanar சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.

45.ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanar மன்னன் பதவியை விட்டு, திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

46.கணம்புல்லர்/Kanampulla Nayanar விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்குஏற்றியவர்

47.காரி/Kari Nayanar காரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.

48.நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara Nayanar திருஞான சம்பந்தாரால், தன்னுடைய நோயும், கூனும் நீக்கப்பெற்று, சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49.வாயிலார்/Vayilar Nayanar இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50.முனையடுவார்/Munaiyaduvar Nayanar அரசருக்காகப் போர் புரிந்து, வரும் வருமானத்தில், அனைவருக்கும் உணவு அளித்தார்.

51.கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanar சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

52.இடங்கழி/Idangazhi Nayanar அரசனாய் இருந்தாலும், தன்னுடைய நெல் களஞ்சியத்தை, சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53.செருத்துணை/Seruthunai Nayanar சிவ பூஜைக்குரிய மலரை மோந்த, கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54.புகழ்த்துணை/Pugazh Tunai Nayanar வறுமை வந்தாலும், கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின், ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க, பொருள் பெற்றார்.

55.கோட்புலி/Kotpuli Nayanar சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.

56.பூசலார்/Pusalar Nayanar பொருள் இல்லாததால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு, இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57.மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyar சைவத்தைப் பரப்பிய, பாண்டிய மகாராணி.  நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58.நேசர்/Nesa Nayanar எப்பொழுதும், சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59.கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanar முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு, யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின், மன்னராய், நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanar ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம், சிவனைப் போற்றியவர்

61.சடையனார் நாயனார்/Sadaya Nayanar சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

62.இசைஞானி/Isaijnaniyar சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63.சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanar தேவாரம் பாடியவர்.  சிவ பெருமானின் தோழர்....

🌙🌙🌙 சிவ சிவ 🌙🌙 சிவாய நம,, 🌙🌙🌙

🍀திருநெல்வேலியை_சுற்றியுள்ள_
கோவில்கள்_பற்றிய_விவரங்கள்

🌹தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.

🍃அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

🌷1.காந்திமதி_நெல்லையப்பர்_கோவில்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்
 இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

🌻 2.சபை_சிவாலயங்கள்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சித்ர சபை - திருக்குற்றாலம் தாமிர சபை- திருநெல்வேலி,,

🍁3.முப்பீட_தலங்கள்
 அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில் ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
 வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

🌸4.பஞ்ச_ஆசன_தலங்கள்
ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
நான்குநேரி - திருநாகேஷ்வரர்
 திருக்கோயில்
விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்

🍃தென்பாண்_நாட்டின்_பஞ்ச_பூத_தலங்கள்
சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
தாருகாபுரம் - நீர் தலம்
தென்மலை- காற்று தலம்
தேவதானம் - ஆகாய தலம்

🍂 5.காசிக்கு_சமமான_பஞ்ச_குரோச
தலங்கள்,,
 சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

🐚6.இராமர்_வழிபட்ட_பஞ்சலிங்க_தலங்கள்

களக்காடு- சத்யவாகீசர்
பத்தை - குலசேகரநாதம் பதுமனேரி - நெல்லையப்பர்தேவநல்லூர் - சோமநாதம்
சிங்கிகுளம் - கைலாசநாதம்

🌴 7.நவ_சமுத்திர_தலங்கள்

அம்பாசமுத்திரம்
ரவணசமுத்திரம்
வீராசமுத்திரம்
அரங்கசமுத்திரம்
தளபதிசமுத்திரம்
வாலசமுத்திரம்
கோபாலசமுத்திரம்
வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

🌾8.பஞ்ச_பீட_தலங்கள்
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

கூர்ம பீடம் - பிரம்மதேசம்
சக்ர பீடம் - குற்றாலம்
பத்ம பீடம் - தென்காசி
காந்தி பீடம் - திருநெல்வேலி
குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

🌺9.சிவ_கைலாயங்கள் (ஆதி கைலாசம்)

பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில் முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்

🌙தச_வீரட்டானத்_தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்) சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம் கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம் சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம் மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்
அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்
காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)

🌻 10.வாலி_வழிபட்டத்_தலங்கள்

திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில் கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்

⚡நவகைலாயங்களும்_நவக்கிரகங்களின் ஆட்சியும்,,

பாபநாசம் - சூரியன்
சேரன்மகாதேவி - சந்திரன்
கோடகநல்லூர் - செவ்வாய்
குன்னத்தூர் - இராகு
முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது) தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

🌸11.வேறு_சில_ஆலயங்கள்
இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

🌺நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.

🍁நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.

🍀சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.,,

🐚 சிவாய நம,, 🍀 இனிய🌷 இனியசொல் 🍁 மாலைப்பொழுது 🌺 இரவு 🌻 வணக்கம் 🍂 சிவ சிவ 🌾
64 உபசாரங்கள்

1.பாத்யம் - திருவடிவகளைக் கழுவதற்கான தீர்த்தம் கொடுத்தல்.
2.ஆவராணாவரோபணம் - நகைகளை கழற்றுதல்.

3.ஸுகந்திதைலாப்யங்கம் - வாஸனை எண்ணை தேய்த்தல்.
4. மஞ்ஜனசாலாப்ரவேசனம் - குளியலறைக்குச் செல்லுதல்.
5. மஞ்ஜனசாலாமணிபீடோபவேசனம் -குளியலறையிலிலுள்ள மணிமய ஆஸனத்திலிருத்தல்
6. திவ்யஸ்னானீயோத் வர்த்தனம் - ஸ்நானத்திற்குரிய வாஸனைப் பொடிகளை சரீரத்தில்
தேய்த்தல்.
7. உஷ்ணோதகஸ்நானம் -வென்னீரில் குளித்தல்.
8. கனககலசச்யுத ஸகல தீர்த்தாபிஷேகம் - தங்கமயமான குடங்களிலிருந்துகொட்டும் எல்லாவித தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்தல்.
9. தௌதவஸ்த்ரபரிமார்ஜ்ஜனம் -வெளுத்ததுணியால் உடம்பு துடைத்தல்
10. அருணதுகூலபரிதானம் - சிவப்பு பட்டை உடுத்துதல்.
11.அருணகுசோத்தரீயம் -சிவப்பு ரவிக்கை அணிவித்தல்.
12. ஆலேபமண்டபப்ரவேசனம் - அலங்கார அறைக்குச் செல்லுதல்.
13. ஆலேபமண்டப மணிபீடோபவேசனம் -மேற்கூறின அறையில் உள்ள ரத்னமயமான பீடத்தில் இருத்தல்.
14.சந்தனாகரு குங்கும ம்ருகமத கஸ்தூரி கோரோசனாதி திவ்யகந்தஸர்வாங்கீண விலேபனம் - அகில்,குங்குமப்பூ, புனுகு, பச்சைக்கற்பூரம், கஸ்தூரி, கோரோசனை முதலான வாஸனை வஸ்துக்கள் கலந்த உயர்ந்த சந்தனத்தை உடம்பில் பூசுதல்.
15. கேசபாரஸ்ய காலாகருதூபம் - தலை காய்வதற்கும், வாசனைக்கும் தூபமிடுதல்
16.மல்லிகா, மாலதி, ஜாதி,சம்பகா சோக சதபத்ர பூக குஹளி, புன்னாக கல்ஹார முக்யஸர்வர்த்து குஸுமமாலாஃ -மல்லிகை(பிச்சகம்-பிச்சி)மாலதி, சம்பகம், அசோகம் தாமரை, பாக்குப் பூ, குஹளி,(வாழைப்பூவில் இருக்கும் கேஸரம்) புன்னைப்பூ, செங்கழுநீர், ஆறுருதுக்களிலும் உண்டானவையாவும் வாசனையாயும் இருக்கும் புஷ்பங்களால் கட்டப்பட்ட மாலைகள்.
17. பூஷண மண்டபப்ரவேசனம் - நகைகள் அணிவதற்காக உள்ள அறையில் செல்லுதல்
18. பூஷண மண்டமணிபீடோபவேசனம் - முன்கூறிய அறையில் ரத்னபீடத்தில் இருத்தல்.
19. நவமணிமகுடம் -புதிதான ரத்ன கிரீடம் அணிதல்.
20. சந்த்ர சகலம் -சந்த்ர கலை.
21.ஸீமந்தஸிந்தூரம்
-வகிட்டில் ஸிந்தூரம் வைத்தல்
22. திலகரத்னம்
- நெற்றிப்பொட்டில் வைக்கும் ரத்னம்.
23. காலாஞ்ஜனம்
- கறுப்பு மை.
24. வாளீயுகளம்
- காதுகளில் அணியும் வாளி என்ற நகை(ஜிமிக்கி என்பர் இப்போது)
25. மணிகுண்டல யுகளம்
- ரத்ன குண்டலங்கள்.
26. நாஸாபரணம்
- மூக்குத்தி - புல்லாக்கு.
27. அதரயாவகம்
- உதட்டின் சிவப்புசாயம்
28. ப்ரதமபூஷணம்
- மாங்கல்யம்.
29. கனகசிந்தாகம்
- தங்கமயமான புளியிலை போன்ற நகை.
30. பதகம்
- பதக்கம்
31. மஹாபதகம்
- நவரத்னங்கள் இழைத்த ஸ்ரீ சக்ரம்(பெரியோர் கூற்று)
32. முக்தாவலி
- முத்துமாலை.
33. ஏகாவளி
- ஒருவடமாலை (நக்ஷ்த்ர மாலை)
34. ச்சன்னவீரம்
- ஒரு ஆபரண விசேஷம்.
35. கேயூரயுகளசதுஷ்டயம்
- ஒவ்வொருகையிலும் இரண்டிரண்டு தோள் வளைகள்.
36. வலயாவளி
- வளைகள்.
37. ஊர்மிகாவளி
- மோதிரங்கள்.
38. காஞ்சீதாம
-ஒட்டியாணம்.
39. கடிஸூத்ரம்
- அரைஞாண்கயிறு.
40. ஸௌபாக்யாபரணம்
-அரை மூடி(அரசிலை).
41. பாதகடகம்
-கால்காப்பு.
42. ரத்னநூபுரம்
- ரத்னமயமான கொலுசு
43. பாதாங்குளீயகம்
- கால்மெட்டி.
44. ஏககரேபாசம்
- ஓர்கையில் பாசக்கயிறு.
45. அன்யகரேஅங்குசம் -மற்றொருகையில் தொரட்டி
46. இதரகரேபுண்ட்ரேக்ஷûசாபம்
- வேறொருகையில் நாமக்கரும்பு.
47.அபரகரேபுஷ்பபாணம் -மற்றொருகையில் புஷ்பபாணங்கள்.
48. ஸ்ரீமன்மாணிக்க பாதுகே -ரத்னமயமான மிதியடிகள்.
49. ஸ்வஸமான வேஷாபிஃ ஆவரணதேவதாபிஃ ஸஹ மஹா சக்ராதிரோஹணம் -தன்னைப்போலவே இருக்கும் ரூபத்துடன்கூடின ஆவரண தேவதைகளுடன் மஹாசக்ரத்தில் ஏறி இருத்தல்.
50. காமேƒவராங்கபர்யங்கோபவே†னம்
- காமேƒவரனுடைய இடது பாகமாகிற கட்டிலில் இருத்தல்.

51. அம்ருதாஸவ சஷகம் -பானம் செய்யும் அம்ருதத்தோடு கூடிய பாத்திரம்.
52. ஆசமனீயம்
- ஆசமனம்.
53. கற்பூர வீடிகா
-பச்சை கற்பூரம் சேர்ந்த பாக்குடன்கூடின பீடா, (செய்விதம்- ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், கஸ்தூரி, பாக்கு, கொப்பரை, திப்பிலி, சுக்கு, கருங்காலி, இவைகளின் பொடிகளுடன் சுண்ணாம்பு சேர்த்த வெற்றிலையை மேருபோல் செய்வது.)
54. ஆனந்தோல்லாஸவிலாஸஹாஸம்
- ஆனந்த களிப்பில் ஏற்பட்ட சிரிப்பு
55. மங்களாரார்த்திகம்
- தங்கம்முதலான பாத்திரங்களில் ஏற்றும் மாவிளக்கு தீபம்.
56. சத்ரம் - குடை.
57. சாமரயுகளம் - இரண்டு வெண்சாமரங்கள்.
58. தர்பணம் - கண்ணாடி.
59. தாளவ்ருந்தம் -விசிறி.
60. கந்தம் - சந்தணம்.
61. புஷ்பம் - பூ
62. தூபம் -சாம்பிராணிதூபம்
63. தீபம் - நெய்தீபம்.
64. நைவேத்யம் - நிவேதனம்.
இவை மஹாஸாம்ராஜ்ய சக்ரவர்த்தினியான லலிதாம்பிகைக் கேற்பட்டதான உபசாரங்கள்.

சிவ இளையா
கி
#ஈசன் காட்சி  அளித்த தலங்கள்

1, திருவையாறு –

ஈசன் அப்பருக்கு காட்க்ஷி தந்தது.

2, முக்கீச்சுரம் –

உதங்க முனிவருக்கு 5 காலங்களில் 5 வண்ணத்தோடு காக்ஷி அளித்தது.

3, திருபூந்திருத்தி –

 நந்தியை விலக செய்து சம்பந்தருக்கு காட்சி தரல்.

4, திருவீழிமிழலை –

 சம்பந்தருக்கு சீர்காழி கோலத்தை இங்கு விண்ணிழி விமானத்தில் காட்டுதல்.

5, கீள்வேளூர் –

 கேடிலியப்பர் அகத்தியருக்கு வலது பாதம் தரிசனம் தரல்.

6, திருக்கழுக்குன்றம் & திருப்பெருந்துறை –

 மணிவாசகருக்கு இறைவன் குருவடிவமாக காட்சி தந்தது.

7, கொட்டையூர் –

சோழ மன்னன், ஏரண்ட முனிவர், பத்திர யோகி, முனிவருக்கு இறைவன் காட்சி தரல்.

8, திருநல்லூர் –

அமர்நீதி நாயனார் துலையேறியபோது இறைவன் காட்சி தரல்.

9, திருவாவடுதுறை –

 முசுகுந்த சக்ரவர்த்திக்கு புத்திரபாக்கியம் அளித்து தியாகராஜராக காட்சி தந்தது.

10, அச்சிறுப்பாக்கம் –

 திரிநேத்திர தாரிமுனிவர்க்கு காட்சி.

11, கஞ்சனூர் –

 பிரம்மனுக்கு திருமண காட்சி.

12, வடதிருமுல்லைவாயில்

 – தொண்டமானுக்கு காட்சி.

13, திருவையாறு –

காவிரி வெள்ளம் விலகி வழிபடசெய்து சுந்தரர், சேரமானுக்கு காட்சி.

14, குடவாயில் –

திருமண பிந்து முனிவர்க்கு உடர்பிணி தீர்த்து காட்சி.

15, கைச்சினம் –

 சாபம்விலகி இந்திரனுக்கு தியாகராஜர் தரிசனம்.

16, திருப்புறம்பியம் –

 கோயிலுக்கு வெளியில் ஒரு விறகு வெட்டிக்கு காட்சி.

17, கொள்ளம்புதூர் –

 சம்பந்தர் நாவினையே ஓடக்கோலாகக் கொண்டு கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம்பாடி மறுகரை அடைந்து ஈசன் காட்சி தரல்.

18, திருப்பைஞ்சிலி –

 வசிட்ட முனிவர்க்கு நடராஜர்பெருமான் காட்சி தந்தது.

19, திருக்கானப்பேர் –

 இறைவன் காளை வடிவம் கொண்டு கையில் பொற்செண்டை திருமுடியில் சிழியுங்கொண்டு சுந்தரருக்கு காட்சி தந்தது.

20, கடம்பந்துறை –

கண்வ முனிவர்க்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சி தரல்.

21, திருக்கண்டியூர் –

 சாதாப முனிவர்க்கு பிரதோச தரிசனம், காளத்தி தரிசனமும் காட்டினா.

22, திருக்கானூர் –

 உமாசிவயோகம் செய்யும்போது ஈசன் அக்கினி ரூபமாக தரிசனம் தந்தது.

23. திருவலம்புரம் –

ஈசன் அப்பரை தாமே வரவழைத்து தரிசனம் தந்தது.

24. திருத்தினைநகர் –

 பெரியன் பள்ளனுக்கு காட்சி தரல்.

★நந்தி கொம்பு ஒடிந்த தலம்: திருவெண்பாக்கம்

★ஈசனோடு நந்தி இணைந்த உருவ தலம்: திருக்கூடலையாத்தூர், பவானி

★நந்தி விலகிய தலம் : திருப்புங்கூர் , பட்டீஸ்வரம் , திருப்பூவனம் திருப்பூந்துருத்தி

★நந்தி நின்ற தலம் : திருமால்பேரு

★நந்தி திருமண தலம் : திருமழபாடி

★நந்தி பிரதோஷ தலம் : திருஅரிசிலி

★நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல் திரும்பியவாறு கோபுரம் நோக்கிய தலம் : திருவோத்தூர் , திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.

ஓம் நமசிவாய.

சிவஇளையா